இரண்டு 'டோஸ்' போதாது - தடுப்பூசி குறித்த புதிய ஆய்வு || Click Here ||
இந்தியா,
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) சமீபத்திய ஆய்வின்படி, தடுப்பூசியை இரண்டு டோஸ் எடுத்துக்கொள்பவர்களில் 16.5 சதவீதம் பேரின் உடலில் வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை.
எனவே, கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் அவசியம் தேவைப்படுகிறது. ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானிகள் நடத்திய தடுப்பூசி ஆய்வின் அறிக்கையில், "கோவிஷெல்" தடுப்பூசி போட்டவர்களில் 58.5 சதவீதப் பேரிடம், புதிய டெல்டா வைரஸு ('பி 1,617.2') வகை என்று அழைக்கப்படும் வைரஸ் நோய்க்கு, உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை, இது. இதன் பொருள் அவர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவு. அதே நேரத்தில் இரண்டு டோஸ் எடுத்தவர்களில், 16.5 சதவீதம் பேரிடம், நோய் எதிர்ப்பு சக்தி தென்படவில்லை. அதாவது இவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும்.
இருப்பினும், முழு நன்மையையும் பாதுகாப்பையும் பெற, மூன்றாவது டோஸ் செலுத்துவது நல்லது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானதாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பகிரவும் || விருப்பம் தெரிவிக்கவும் || கருத்து தெரிவிக்கவும் || பதிவு செய்யுங்கள் || நன்றி ||
Comments
Post a Comment