Click Here || இப்போது 3 வது டோஸ் தேவையில்லை: ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி போட உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது
ஜெனிவா:
கோவிட் தடுப்பூசி 3வது டோஸ் இனி தேவையில்லை. அதற்கு பதிலாக தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டும் 'என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளில் உள்ள சில மருந்து நிறுவனங்கள் தங்களது 3வது டோஸ் கோவிட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் பெற விண்ணப்பித்துள்ளன என்று உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறினார்.
கோவிட் -19 நோய்த்தொற்றுக்கான 3 வது டோஸ் தடுப்பூசியை அங்கீகரிக்க போதுமான அறிவியல் சான்றுகள் மற்றும் தரவுகள் இல்லை. இந்தநிலையில், பணக்கார நாடுகள் தங்களிடம் மீதமுள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு விநியோகிக்க முன்வர வேண்டும். உலகளவில் சில வாரங்களாக கோவிட் இறப்புகள் குறைந்திருந்த நிலையில் காணப்பட்டாலு, டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்திற்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் அவசர அவசரகாலப் பிரிவின் தலைவர் மைக்கேல் ரியான் கூறியதாவது, ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கொடுக்காமல் 3வது டோஸ் பணக்கார நாடுகள் தங்கள் மக்களுக்கு செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தால், அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க பணக்கார நாடுகள் மறுப்பது ஏமாற்றம் அளிக்கிறது' என்றார்.
பகிரவும் || விருப்பம் தெரிவிக்கவும் || கருத்து தெரிவிக்கவும் || பதிவு செய்யுங்கள் || நன்றி ||
Comments
Post a Comment