பூஸ்டர் ஷாட்: அனுமதி எதிர்பார்க்கும் நிறுவனங்கள் || இங்கே கிளிக் செய்க
அமெரிக்கா,
கோவிட் -19 வைரஸ் உருமாறி இருப்பதால், தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க மூன்றாம் தவணை தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்குமாறு அரசாங்கத்திடம் ஃபைசர் மற்றும் பையோஎன்டெக் கேட்டுள்ளது.
பல நாடுகளில் நோய் தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ளது, இந்த தொற்றுநோய்க்கு காரணம் டெல்டா வகை கோவிட்-19 வைரஸ் உருமாற்றமே. இன்த ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் ஜப்பான், பல நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களை தடை செய்துள்ளது. போட்டி நடைபெறும் தலைநகர் டோக்கியோவில் அவசரகால நிலை பிரப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆஸ்திரேலியாவும் சிட்னியில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இயல்பு நிலைக்கு திரும்புவது ஆபத்தானது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறது.
பைசர் மற்றும் பையோஎன்டெக் நிறுவனங்கள் மூன்றாம் தவணை தடுப்பூசிக்கு அனுமதி எதிர்பார்க்கிறது. மூன்றாம் தவணை தடுப்பூசி டெல்டா வகைக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என கூறியுள்ளது. சமீபத்திய ஆராய்ச்சியிள் இரண்டாவது தடுப்பூசி செலுத்திய 6 மாதங்களுக்கு பின் பூஸ்டர் தடுப்பூசி போடுவது நோய் எதிர்ப்பாற்றலை 5 முதல் 10 மடங்கு பெருக்கும் என்கிறது. அவை பீட்டா வகை வைரசுக்கு இத்தகைய முடிவுகளை காட்டுகின்றன. டெல்டா வகைக்கும் அதே முடிவுகளை எதிர்பார்க்கலாம் என பைசர் மற்றும் பையோஎன்டெக் நிறுவனங்கள் கூறுகின்றனர்.
தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், பூஸ்டர் ஷாட் தேவையா என்பதை ஆய்வு செய்வதாகக் தெரிவித்துள்ளது. "முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு இந்த நேரத்தில் பூஸ்டர் ஷாட் தேவையில்லை. அது அவசியம் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என கூறியுள்ளது.
பகிரவும் || விருப்பம் தெரிவிக்கவும் || கருத்து தெரிவிக்கவும் || பதிவு செய்யுங்கள் || நன்றி ||
Comments
Post a Comment