எரிமலையின் உலோக பொக்கிஷங்கள்! || இங்கே கிளிக் செய்க

லண்டன்,

சுரங்கத் தொழிலுக்கு உலகளவில் எதிர்ப்புகள் அதிகமாக வளர்ந்து வருகிறது. ஆகையால், எதிர்காலத்தில் தங்கம், தாமிரம், லித்தியம் போன்ற உலோகத் தேவைகளுக்கு என்ன செய்வது போன்ற கேள்விகள் எழுகின்றன? இதற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய உத்தியை முன்வைத்துள்ளனர்.

அவ்வப்போது உலகம் முழுவதும் வெடிக்கும் எரிமலைகளின் அடிப்பகுதியில், ஏராளமான எரிமலைக் குழம்புகள் ஆறி உலோகப் பாறைகளாக மாறிக்கிடக்கின்றன. 

ஆக்ஸ்போர்டு   விஞ்ஞானிகள்  கூறியதாவது என்னவென்றால், புதுவிதமான சுரங்கத் தொழில்நுட்பங்களை உருவாக்கி உலோகப் பாறைகளை எடுக்க முடியும். மேலும் பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் உலோகங்களும் பண்டைக்கால எரிமலைக் குழம்புகள்தான். ஆனால் கடந்த சில நூற்றாண்டுகளாக எரிமலைப் பகுதிகளில் உள்ள பாறைகளை யாரும் பார்வையிடவில்.

எனவே, எரிமலையின் உச்சியில் இருந்து 2 கி.மீ தூரத்தில், கீழே உள்ள குழம்புகள் மற்றும் பாறைகளை குடைந்து எடுப்பதன் மூலம் பல விலைமதிப்பற்ற உலோகங்களை பிரித்தெடுக்க முடியும் என்றும், அதே நேரம் பூமியின் வெப்பத்தை வைத்து மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் என ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான புதிய தொழில்நுட்பங்களையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

பகிரவும் || விருப்பம் தெரிவிக்கவும் || கருத்து தெரிவிக்கவும் || பதிவு செய்யுங்கள் || நன்றி ||

Comments

Popular posts from this blog

At Dubai airport, travellers' eyes become their passports